மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.!

63பார்த்தது
மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் படிக்காத மேதையுமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தின விழாவை நாடார் மகாஜன சங்கம் தொடர்ந்து கல்வித் திருவிழாவாக கொண்டாடி வருகிறது.

இதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது 6 முதல் 12ஆம் வகுப்பு ‌ மாணவர்களுக்கு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

போட்டியில் ஆர். எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்இ. இசக்கி ராஜா ‌ நடுநிலை பிரிவிலும், 12 ஆம் வகுப்பு மாணவர் அ. முகமது அஸ்பாக் மேல்நிலை பிரிவிலும் கலந்து கொண்டனர்.

இதில் முகம்மது அஸ்பாக் 'காமராஜரின் அரசியல் பணியும்‌ ஆட்சிப் பணியும்' என்ற தலைப்பில் சிறப்பாக பேசி இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியர் ராஜு, வழிகாட்டி ஆசிரியர் சதக் அப்துல்லா, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் ‌, மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினார்.

டேக்ஸ் :