திருவாடானையில் அரசு அலுவலகத்தை காணவில்லை

55பார்த்தது
திருவாடானையில் அரசு அலுவலகத்தை காணவில்லை பொதுமக்கள் தேடி வருகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடணையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் பாரதிநகரில்  உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலக மாடியில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாற்றப்பட்டுள்ளது.

இதில் என்ன வேடிக்கை என்றால் யூனியன் அலுவலம் அருகில்  ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு கட்டடப்பட்டு இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.
    இது பற்றி அந்த அலுவலகத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் ஒட்டப்பட்டுள்ளது.
    ஆனால் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் பற்றி எந்த தகவலும் இல்லை. அந்த அலுவலகம் எங்கு இருக்கிறது என்று தகவலும் மக்களுக்கு தெரியாமல் அலைந்து வருகின்றனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்களும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அதனால் பொதுமக்கள் அலைந்து குழம்பி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி