புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்.!

669பார்த்தது
புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்.!
திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஏம்பலுக்கு புதிய வழித் தடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நகரப் பேருந்தை, திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேருந்து திருவாடானையில் இருந்து அஞ்சு கோட்டை, மங்களக்குடி, கண்ணங்குடி வழியாக ஏம்பலுக்கு செல்லும். இந்தப் பேருந்து காலை 6 மணிக்கு ஏம்பலிலிருந்து திருவாடானைக்கும், மாலை 6 மணிக்கு திருவாடானையிலிருந்து ஏம்பலுக்கும் வந்து செல்லும் என்று போக்குவரத்துக் கழக நிா்வாகிகள் தெரிவித்தனா். இதில் ஒன்றியக் குழுக் தலைவா் முகம்மது முக்தாா், திமுக ஒன்றியச் செயலாளா்கள் சரவணன், ரவி, திமுக நகரச் செயலாளா் பாலா, காங்கிரஸ் நகரத் தலைவா் செந்தில்குமாா், அரசுப் போக்குவரத்துத் துறை வணிகம் நாகராஜ், தேவகோட்டை கிளை மேலாளா் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி