பஸ்களில் இருக்கை இல்லாததால் பயணிகள் சிரமம்.!

72பார்த்தது
பஸ்களில் இருக்கை இல்லாததால் பயணிகள் சிரமம்.!
டவுன் பஸ் நடுவில் இரண்டு இருக்கைகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

திருவாடானையை மையமாக வைத்து 12 டவுன் பஸ்கள் இயக்கபடுகின்றன. இப்பஸ்கள் தேவகோட்டை, ஆர். எஸ். மங்கலம், தொண்டி, ஆண்டாவூரணி, காரங்காடு, நெய்வயல், கோவிந்தங்கலம், ஆனந்துார், சோழந்துார், சனவேலி, மங்களக்குடி போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.

இதில் திருவாடானையில் இருந்து டி. என். 63-என் - 1494 கோவிந்தமங்கலம் செல்லும் டவுன் பஸ் நடுவில் இரண்டு இருக்கைகள் இல்லாமல் உள்ளது. பயணிகளில் அமர இரு பக்கமும் இரு இருக்கைகள் அமைக்கபட்டுள்ள நிலையில் நடுவில் இரண்டு இருக்கைகள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான டவுன் பஸ்கள் கட, கட என்ற சத்தத்துடன் பாதி வழியில் நின்று போகும் அளவிற்கு இயக்கப்படுகிறது.

இப்பஸ்களை நம்பி ஊருக்கு செல்ல முடியவில்லை. பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். அனைத்து டவுன் பஸ்களிலும் இரண்டு இருக்கைகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. கைக்குழந்தையுடன் செல்லும் பெண்கள் மேல் கம்பியை பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டே செல்கின்றனர். எனவே இருக்கைகள் அமைக்க போக்குவரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி