ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் ஒன்றியம் சனவேலி ஊராட்சி கவ்வூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சார்பில் மடத்தூரணியில் ரூ. 9. 08 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. பிப். 25 ஆம் தேதி தொடங்கிய இப்பணி மார்ச் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. தற்போது இந்த தடுப்பணை இடிந்து விழும் நிலையில் உள்ளது. 7 மாதம் மட்டுமே கடந்த நிலையில், தடுப்பணையின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நடப்பாண்டு பருவ மழைக்கு தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகமா? இப்பணியின் தரத்தை மீண்டும் உறுதிசெய்து நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.