ரா.புரம்: பெண்களை பாதுகாத்தல் பற்றிய  விழிப்புணர்வு

54பார்த்தது
திருவாடானை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமூகவியல் மற்றும் மகளிர் உரிமைத் துறை, காவல் துறை ராமநாதபுரம், சில்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாடானை டிஎஸ்பி சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா, சார்பு ஆய்வாளர் சித்ராதேவி உள்ளிட்டவர்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பற்றியும் அதன் சட்டங்கள் பற்றியும் விழிப்புணர்வு விளக்க உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி