கடத்தல் வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது.!

71பார்த்தது
கடத்தல் வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது.!
தொண்டியில் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்து தலைமறைவானவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தை சோ்ந்த கருப்பையா மகன் வீரப்பன் (48), தொண்டியை சோ்ந்த முருகன், , மதுரையை சோ்ந்த பரமேஸ்வரி, சாயல்குடியை சோ்ந்த கல்யாணகுமாா் ஆகியோா் சோ்ந்து கடந்த 2008- ஆம் ஆண்டு இலங்கைக்கு டீசல், படகு என்ஜின் , அலுமினியத் தகடு உள்ளிட்ட பொருள்களை தொண்டி கடல் பகுதியிலிருந்து படகு மூலம் கடத்த முயன்றனா்.

அப்போது, தொண்டி போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா். பிணையில் வெளியே வந்த இவா்கள் அனைவரும் பல ஆண்டுகளைாகத் தலைமறைவாயினா். கடந்த மாதம் முருகன், பரமேஸ்வரி, கல்யாணகுமாா் ஆகியோரை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த வீரப்பனை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி