சாலையில் திரியும் மாடுகளால் தொடரும் விபத்துக்கள்

67பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கொச்சி-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
       கடந்த மூன்றாம் தேதி கேரளாவில் மீன் இறக்கிவிட்டு வந்த லாரி வரும் பொழுது மாடு குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய டிரைவரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் மீட்டனர்.
    அதேபோல் மாடுகளால் இப்பகுதியில் 5 நாட்களுக்குள்
ஆவுடையார்கோவில், தொண்டி, மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது அதே இடத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி