திருவாடானை அருகே அரசு பேருந்து மோதியில் வாலிபர் சம்பவப்படுத்தலையே பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தேவகோட்டையிலிருந்து வட்டாணம் செல்லும் சாலையில் மாணிக்கங்கோட்டை விளக்கு பகுதி உள்ளது.
இங்கு இன்று மாலை தேவகோட்டையில் இருந்து ஓரியூர் நோக்கி வந்த 13ம் எண் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் அடுத்தகுடியை சேர்ந்த வேலு என்பவரின் பேரன் பாலு (30) வாலிபர் தனது 2 சக்கர வாகனத்தில் வந்து வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாலு பலியானார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் விபத்தில் பலியான பாலாவின் உடலை கைப்பற்றி திருவாடனை அரசு மருத்துவமனைக்கு பிணகூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.