திருவாடானை வழக்கறிஞர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றாத படத்தில் பல்வேறு போராட்டங்களை கையில் எடுக்க போவதாக எச்சரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருவாடானை வழக்கறிஞர் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதைதடுத்து நிறுத்த ஏதுவாக சட்டம் இயற்ற வேண்டும் என திருவாடானை வழங்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ,
தமிழ்நாட்டில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் சங்க செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் விரைந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கண்டனம் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது பற்றி வழக்கறிஞர்கள் கூறுகையில் மருத்துவருக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தபோது உடனடியாக வழிகாட்டுதல் நெறி முறையை ஏற்படுத்திய அரசு வழக்கறிஞர்களுக்கும் சட்டம் இயற்றாமல் பாரா முகமாக இருப்பது வேதனையாக இருப்பதாகவும் எனவே துரித நடவடிக்கை எடுத்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்களை கையில் எடுக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.