திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் 4 பேருக்கு காயம்..!

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கற்களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை  முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள்,   சார்பாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. ஒன்பது வீரர்கள் அடங்கிய குழு 12 குழுக்களாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாடு பிடி வீரர்களுக்கும் மாட்டிற்கும் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற காளைக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பணம், சைக்கிள், வெள்ளி காரசு, பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிழ்வில் மாடு முடியதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது உடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் மருத்துவ உதவியும் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி