210 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது.!

80பார்த்தது
210 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; 2 பேர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டினத்தில் கடலுக்குள் படகில் வைத்திருந்த 210 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் அரிய வகை கடல் அட்டைகளை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ குணம் கடல் அட்டையில் உள்ளதாக கூறப்படுவதால் இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது.

காய வைத்த கடல்அட்டை கிலோ ரூ. 10 ஆயிரம் வரை வெளி நாடுகளில் விற்கின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தல் தொண்டி, தேவிப்பட்டினம், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடல் அட்டை கடத்தல் தொடர்கிறது.

நேற்று தொண்டி அருகே புதுப்பட்டினத்தில் வனத்துறையின் கடல் உயர் அடுக்குப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடலில் ஒரு படகில் இருந்து மற்றொரு படகிற்கு கடல் அட்டைகளை மாற்றுவது தெரிய வந்தது.

படகில் 28 சாக்கு மூடைகளில் இருந்த 210 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை பிடித்து ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

முள்ளிமுனையைச் சேர்ந்த பொன்னு துரை 54, மணக்குடி நேருதாஸ் 45, ஆகியோரை வனச்சரகர் திவ்ய லட்சுமி கைது செய்து விசாரிக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி