சிவகங்கை: மீன்பிடித் திருவிழா (VIDEO)

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மற்றும் திருப்பத்தூர் தாலுகா பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு குறைந்து வருவதால் மீன்பிடித் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிபட்டி மருதி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

இதில் முறையூர், சூரக்குடி, சிலநீர்பட்டி, அரளிபட்டி போன்ற கிராமங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சாமிக்கு கும்பிட்ட பின் கிராம முக்கியஸ்தர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கினர். மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். 

தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன்பிடி வலை, அரிக்கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் கெண்டை, ஜிலேபி, அயிரை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை குடும்பத்துடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனர். இப்படி கிராமங்கள் தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தொண்டுதொட்டு கிராமங்கள் தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி