மண்டபம் அருகே உள்ள மைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் கடந்த 18. 8. 22 அன்று 16 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கவிதா பாலச்சந்தருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 15, 000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.