உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்.!

73பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்.!
கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரிய வகை உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

வனவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் அரிய வகை உயிரினங்களை பாதுகாப்போம், பனை மரங்கள் அழிவை தடுப்போம், இயற்கை வளங்களை நேசிப்போம் என்ற தலைப்பில் பதாகை களை ஏந்தியவாறு வந்தனர்.

கீழக்கரை மன்னார் வளைகுடா வனச் சரக அலுவலகத்தில் இருந்து திருப்புல்லாணி, சேதுக்கரை, கோரைக்குட்டம் வரை ஊர்வலம் நடந்தது. வேட்டை தடுப்புக் காவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி