மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி, விற்பனை அப்துல் கலாம் நினைவிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 10 க்கும் மேற்பட்ட கடைகளில் மகளிர் குழு பெண்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.