வீட்டுமனை பட்டா கோரி தாசில்தாரிடம் மனு அளித்த மகளிர்.!

150பார்த்தது
வீட்டுமனை பட்டா கோரி தாசில்தாரிடம் மனு அளித்த மகளிர்.!
ராமநாதபுரம்அருகே சூரங்கோட்டை ஊராட்சி மீனாட்சிபுரம் பட்டியலின சமூக குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடந்தது. ராமநாதபுரம் தாலுகா செயலாளர்  செல்வராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் குருவேல், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேஷ், தொச தாலுகா செயலர் அழகேந்திரன் மற்றும் வீட்டு மனை கேட்டு பட்டியலின மக்கள் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அரசு விதிமுறைகளின் படி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ஸ்ரீதரன் உறுதி அளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி