திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
நம்புதாளை அருகே சம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ராணி இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ராணி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தீ குளிக்க முற்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.