ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நான்கு ரத வீதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகராட்சி நிர்வாகம் நான்கு ரத வீதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.