விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ராமநாதபுரத்தில் ஏழு திரையரங்கில் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியான நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெகன் தியேட்டரில் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் டாட்டா சுமோ வாகனத்தில் மேலாடை கழற்றி அலப்பறை செய்வது முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆரவாரம் செய்து படம் பார்க்கச் சென்றனர்.