ராமேசுவரம், கீழக்கரையில் காா்கில் வெற்றி தினக் கொண்டாட்டம்.!

81பார்த்தது
ராமேசுவரம், கீழக்கரையில் காா்கில் வெற்றி தினக் கொண்டாட்டம்.!
ராமேசுவரம், கீழக்கரையில் 25- ஆம் ஆண்டு காா்கில் வெற்றி தினக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை சாா்பில் நடைபெற்ற காா்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் கணேசபாண்டியன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செல்வக்குமாா் வரவேற்றாா். ராமேசுவரம் கடற்படை லெப்டினன்ட் கமாண்டா் விஜயகுமாா் காா்கில் வெற்றி தின உரையாற்றினாா்.

இந்த நிகழ்வில், தேசிய மாணவா் படையினா், கடற்படை நிா்மல் கௌசிக், பிரசாந்த், பசுமைப்படை பொறுப்பாசிரியா் ஜேம்ஸ் ஆனந்தன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஜெ. ஆா். சி. கவுன்சிலா் தினகரன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா் பழனிச்சாமி செய்திருந்தாா்.

இதே போல, கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் என். சி. சி. தரைப்படை, கப்பற்படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து காா்கில் போா் வெற்றி தின நிகழ்வை நடத்தின. இதற்கு, கல்லூரி முதல்வா் ஏ. சேக்தாவூது தலைமை வகித்தாா். அப்போது போரில் உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. காா்கில் போரின் வெற்றி குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வில், கல்லூரி துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், என். சி. சி. மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி