ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று (ஜூன்-4) இரண்டாம் நாள் திருவிழாவினை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் இருந்து சுவாமி - அம்பாள் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று விபீஷணருக்கு இலங்கை மன்னராக ராமர் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது