ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற்கரை செல்லும் வாகன நுழைவு கட்டண ஏலம் இன்று (டிச.23) நடந்தது.
இதில் 16 பேர் கலந்து கொண்டனர். வரும் 2025 ஆம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ. 10,41,326 இல் இருந்து ரூ. 40 லட்சத்திற்கு பழனி என்பவர் ஏலம் எடுத்தார். அரசு நிர்ணயித்த தொகையை விட 3 மடங்கு உயர்த்தி ஏலம் போனது இதுவே முதல் முறையாகும்.