ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர கழகச் செயலாளர் A.S. பாண்டியன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், செந்தில், சதாம் உசேன் குமார் உட்பட தேமுதிக செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டு மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.