சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் உயரத்தில் ஏறி கடலின் அழகையும், கடற்கரையையும் ரசிப்பதற்காக ஏராளமானோர் விடுமுறை நாளில் குவிந்தனர். வரிசையில் காத்திருந்து கண்டு ரசித்தனர்.