மனைவியை சமரசம் செய்ய சென்ற போது மோதல்: மூவருக்கு கத்திக்குத்து
உச்சிப்புளி, மோகன்குமார் , பிரியங்கா தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மோகன்குமார் மனைவியை சமரசம் செய்து அழைத்து வர தனது உறவினர்கள் காளிதாஸ், வானீஸ்வரன் ஆகியோருடன் முத்துப்பேட்டை சென்றார். சமரசம் பேசியதில் வாக்குவாதம் முற்றியதில் பிரியங்கா தரப்பினர் மூவருக்கு கத்தி குத்து ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரை திருப்புல்லாணி போலீசார் தேடி வருகின்றனர்.