பாம்பன் பகுதியில் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தலும் உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கால்நடைகளை ஊராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி உரியவரிடம் ஒப்படைக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்