ராமநாதபுரம், மே 19 -
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய மாங்காடு, தங்கச்சிமடம் துவக்கப் பள்ளியில் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை , இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்கள் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியைகள் ஹெரினா வில்ஸ் ராணி, செல்ல மீனா தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைச் செயலர் ஜெரோம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
அறிவியல் சோதனைகள், அதிசயத்தக்க நிகழ்வுகள், வேடிக்கை கணிதம், சமையலறை அறிவியல், விளையாட்டு மற்றும் கதைகள், கற்பனை மற்றும் படைப்பாற்றல், உள்ளூர் வளங்களை கண்டறிதல், அறிவியல் பாடல்கள், காகித
வேலை குறித்து வானவில் மன்ற கருத்தாளர் வைரமணி, இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் குகனேஸ்வரி, நம்பு கார்த்திகா பயிற்சி அளித்தனர். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன், கலந்து கொண்டார். எழுபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா ஏற்பாடு செய்தனர்.