ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோயிலில், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பரிகார வழிகாட்டியாகத் திகழ்கிறது. ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருந்து, அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்