பாம்பன் பாலத்தினை இயக்க எடை சமமாக்கும் பணிகள் தீவிரம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 700 டன் எடை கொண்ட செங்குத்து பாலத்தினை ஏற்றி இறக்கி இயக்குவதற்கான வின் வீலில் எடை சரிசமமாக இல்லாததால் சோதனை நடைபெறுவது தாமதமாகி வருகிறது. தற்போது எடை சரிசமமாக வைப்பதற்கான இரும்பு ராடுகள் வைத்து எடை சமமாக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பிறகு செங்குத்து பாலத்தினை இயக்கி சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது