அப்துல்கலாம் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் அவதி.!

72பார்த்தது
அப்துல்கலாம் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் அவதி.!
ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1 செயல்படுகிறது. இது குடியரசு முன்னாள் தலைவா் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் படித்த பள்ளி என்ற பெருமை உள்ளது.

இதனிடையே இந்தப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிதாக 6 வகுப்பறைகள் கட்ட மாநில நிதி ஆணையம் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 95 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. ஆனால் 5 மாதங்கள் கடந்த நிலையிலும், தற்போது வரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் மாணவ, மாணவிகள் போதிய வகுப்பறை இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பழுதான வகுப்பறை கட்டடத்தை இடித்து அதன் கட்டடக் கழிவுகள் பள்ளிக்குள்ளேயே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், சில நேரங்களில் அதன் அருகே சென்று விளையாடும் போது கற்கள் மீது விழுந்து மாணவ, மாணவிகள் காயமடைகின்றனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் படித்த பள்ளி என்பதால் அதன் முக்கியத்துவம் அறிந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு நினைக்கிறது. ஆனால் இதற்கான திட்டங்களை மாவட்ட நிா்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என பெற்றோா்கள் வேதனை தெரிவித்தனா்.

எனவே, இந்தப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடைய செய்தி