துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட இலங்கை கடற்படை

67பார்த்தது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கட்சித்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி அச்சுறுத்தி மீனவர்களை விரட்டி அடித்துள்ளது.

இதில் அச்சமடைந்த மீனவர்கள் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விடுவார்கலோ என்ற பயத்தில் மீன்பிடிக்காமல் கரை திருப்பி வருகின்றனர். இதனால் ஒரு படகிற்கு ஐம்பதாயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு சர்வதேச எல்லைப் பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அதிகளவு நிறுத்தப்பட்டு உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி