ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தள்ளுமுள்ளு.!

50பார்த்தது
ராமேஸ்வரம்  தலைமை தபால் நிலையம் முன்பு ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மூத்தவழக்கறிஞர் டோம்னிக்ரவி  தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தாங்கள் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், வழக்கம்போல தங்கள் நீதிமன்றப்பணிகளை தொடரவுள்ளதாகவும் தெரிவித்து திடீரென இன்று ராமேசுவரம் நீதிமன்றத்திற்கு BJP, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் அல்லாத பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சித் தொண்டர்களுடன் திரண்டு வந்து ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்களைத் தாக்கியதாகக்கூறப்படுகிறது. போலீசார் தடுத்து நிறுத்தி இருபிரிவினரையும் களைந்து செல்ல வைத்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத்தணித்து அமைதியை ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்ததைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி