பெங்கல் புயலின் எதிரொலியாக பாம்பன் கடற்கரைப் பகுதிகளில் கடல் அதிகமாக சீற்றத்துடன் காணப்படுகிறது. சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்படுகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன. மேலும் 2 நாட்களுக்கு ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது