கலெக்டர் ஆபீஸில் கதறி அழுத மூதாட்டி.!

82பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் 'தொருவளூர்' கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி குஞ்சரம் வயது 78. கணவனை இழந்த இவர் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் தன்னுடைய குறை குறித்து மனு அளிக்க வந்த அவர், அந்த பகுதியில் மனு எழுதிக் கொடுக்கும் நபர் ஒருவரை சந்தித்து தன்னுடைய குறையை மனுவாக எழுதி தருமாறு கூறியுள்ளார். அப்போது அவரிடம் மனுவை எழுதி கொடுப்பது போல் மூதாட்டி வைத்திருந்த கைப்பையில் உள்ள மணிபர்சை எடுத்து அதில் இருந்த ரூபாய் 1500 ஐ பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதனால் கதறி துடித்த மூதாட்டி அன்றையதினம் அருகில் இருந்தவர்களிடம் பேருந்துக்காண கட்டணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் இன்று அவரை தேடி தள்ளாடும் வயதில் மனு எழுதும் இடத்தில் அமர்ந்து கொண்டு செய்வதறியாது கதறி துடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி