நிதி வழங்கி அடிக்கல் நாட்டிய தொழில் அதிபர்.

55பார்த்தது
அரசு பள்ளிகளுக்கு நான்கு கோடி ரூபாய்க்கு மேல் கட்டிட பணிகளுக்கு நிதி வழங்கி அடிக்கல் நாட்டிய தொழில் அதிபர்


அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டுமானங்கள் கட்டுவதற்காக தமிழக அரசின் பள்ளி கல்வி துறை வழிகாட்டுதல் படி  நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் மாட்டின் தொண்டு நிறுவன நிறுவனர் லீமாரோஸ் மார்ட்டின் தலைமையில் ரூபாய் 4 கோடி 43 லட்சத்து 9472 ரூபாய் செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
     பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கலையரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு என்று தொழில் அதிபர் லீமாரோஸ் மார்டின் அடிக்கல் நாட்டினார். உடன் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திருவாசகமணி, ஆண்கள் பள்ளி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி