வேளானூர் கிராமத்தில் எருதுகட்டுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா வேளானூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஊர்க்காவலன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா என்னும் மாடுபிடி திருவிழா நேற்று (அக்.,5) நடைபெற்றது. இவ்விழாவில் 30 காளைகள் நேர்த்தி கடனாக களம் இறக்கப்பட்டு சீறிப்பாயும் காளைகளை ஒரு வார காலம் விரதம் இருந்த வீரர்கள் மிகச் சிறப்புடன் அடக்கும் நிகழ்வு மைதானத்தை சுற்றி நிற்கும் காண்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.