தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 2 நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்டுப்படகுகளில் இரு சக்கர வாகனங்களின் என்ஜின்களை பொருத்தி மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் நாட்டுப்படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை பொருத்தி மீன்பிடிப்பதாக புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன், மீன்வளத் துறை ஆய்வாளர் விஷால் ஆகியோர் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நாட்டுப் படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர்.
இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை நாட்டுப் படகில் பொருத்தி மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.