இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் 'மலைச்சாமி' மற்றும் இலங்கை கடற்படை தாக்குதலில் கடலில் மாயமான ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு. MA. முனியசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. A. அன்வர் ராஜா Ex MP ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்பு மாவட்ட கழக செயலாளர் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்.
இதில் முன்னாள் வாரிய தலைவர் G. முனியசாமி, நகர் கழகச் செயலாளர் KK. அர்ஜுனன் , கழக மாணவர் அணி துணைச் செயலாளர் K. செந்தில்குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் A. சரவணகுமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் TG. ஜானகிராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் GM. ஸ்டாலின், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் SD. செந்தில்குமார் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் AP. சந்திரன், ராமேஸ்வரம் நகர் மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.