தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா தேர் பவனி.!

69பார்த்தது
தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா தேர் பவனி.!
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த சந்தியாகப்பர் சர்ச் திருவிழா தேர்பவனியில் மும்மதத்தினர் பங்கேற்று அருளாசி பெற்றனர்.

தங்கச்சிமடம் வேர்க்காடு கிராமத்தில் உள்ள பழமையான சந்தியாகப்பர் சர்ச் திருவிழா ஜூலை 16ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து சர்ச் வளாகத்தில் தினமும் நற்கருணை, ஆராதனை திருப்பலி பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு சர்ச் வளாகத்தில் சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் ஆரோன் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதன்பின் அன்றிரவு அலங்கரித்த தேரில் புனித சந்தியாகப்பர் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள், ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் பங்கேற்று அருளாசி பெற்றனர்.

ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் அருள்தாஸ் தலைமையில் தென்குடா, ஓலைகுடா, தண்ணீர் ஊற்று, அக்காள்மடம், வேர்க்கோடு, அரியாங்குண்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி