ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்ற தலைப்பில் திருக்குறளின் சிறப்பு, நேர்மறை சிந்தனை, கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் பொதிந்துள்ள வாழ்க்கை தத்துவங்கள் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி பேசினார். பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள், தொழில் பயிற்சி வழிகாட்டி கையேடுகள், தொழில் முனைவோர், உயர்கல்விக்கான கடன் திட்ட உதவிகள், வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி துறை, உயர்கல்வி தேர்விற்கான ஆலோசனை, வங்கிகளின் ஆலோசனை அரங்குகளை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.