*ராமேஸ்வரத்தில் மாதம் ஒருமுறை நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து காவலர்களும் விடுதி மற்றும் தனியார் உடை மாற்றும் பகுதிகளில் திடீர் சோதனை
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கரை முன்பாக உள்ள தனியார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது செல்போன் மற்றும் மெமரி கார்டு, கேமராக்கள் சைபர் கிரைம் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ராமேஸ்வரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி கிழக்கு கோபுர வாசல் மற்றும் வடக்கு கோபுர வாசலில் உள்ள 30க்கும் மேற்பட்ட விடுதிகள் மற்றும் தனியார் உடைமாற்றும் அறைகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சாந்த மூர்த்தி ஒவ்வொரு மாதமும் நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து காவலர்களும் இப்பகுதியில் இருக்கக்கூடிய விடுதிகள் மற்றும் தனியார் உடைமாற்றும் அறைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் திடீர் சோதனை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வார்கள், தொடர்ந்து சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.