ராமநாதபுரத்தில் அரசு பள்ளியில் ஆங்கிலம் பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கையில் சேர முடியாமல் மாணவர்கள் தத்தளிப்பு, பெற்றோர்கள் குமுறல். ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழியில் பயின்ற மாணவர்கள் அதே பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு ஆங்கில கல்வி இல்லாததால் எங்கு சென்று படிக்க முடியும் என மனவேதனையில் உள்ளனர். இந்த ஆண்டிற்கான பள்ளி துவங்கிய முதல் நாளில் பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற மக்கள் பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்களிடம் தங்களது குழந்தைகள் ஆங்கிலம் பயின்றதால் மேல்நிலை வகுப்பிற்கு அரசு உத்தரவிட்டும் பள்ளியில் சேர்க்கை இல்லை என கூறியதால் பரிதவித்த பெற்றோர்கள் எங்கள் குழந்தைகளை இந்த பள்ளியை நம்பித்தான் படிக்க வைத்தோம் எனவும், தனியார் பள்ளிக்குச் சென்றால் தங்களது குழந்தைக்கு இடமில்லை எனவும் கூறுகின்றனர். மேலும் இதே பள்ளியில் படித்த எங்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி விட்டது என தனது மனக்குமுறல்களை வெளியிட்டனர்.