இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று பொங்கல் திருவிழா கொண்டப்பட்டது. இந்த பொங்கல் திருவிழாவில் கல்லூரி மாணவிகள் ஒரே நிற சேலைகள் அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர். அப்போது தங்களது தோழிகளுடன் இணைந்து பாரம்பரிய நடனமான கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்