அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜீன். 2) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதில் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளியான மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண்-1 இல் இன்று புதிதாக பள்ளியில் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து, கிரீடம் அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்