புத்தகத் திருவிழாவில் பல குரலில் பேசி அசத்திய மாணவன்
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் 7வது புத்தகத் திருவிழா துவக்க விழா நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் வைரவன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் பல குரலில் பேசி அசத்தினார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.