ராமேஸ்வரம் அருகே பாம்பன் இந்திரா காந்தி சாலை பாலத்தின் தொடர்மழைகாரணமாக சாலையில் ஆங்காங்கே தோன்றிய பள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேதமடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் தீவப்பகுதியையும் மண்டபம் நிலப் பகுதியையும் இணைக்க கூடிய முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவின் பேரில் சுமார் 64 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
இந்த பாலம் 2. 34 கிலோமீட்டர் தூரமும் 44 தூண்கள் கொண்டும் அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட ஒரு பிரமிப்பு மிக்க சிறப்புமிக்க பாலம் ஆகும் 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் இந்த பாலம் திறக்கப்பட்ட தற்போது வரை 36 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் பாலத்தின் சாலை பகுதியில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து சரி செய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழை காரணமாக சாலையில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளன இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்