இலங்கை போலீஸ்காரர் வழக்கு ஜன. 5ந் தேதிக்கு தள்ளிவைப்பு.!

2309பார்த்தது
இலங்கையில் போதைப்பொருள் திருட்டு வழக்கில் தலைமறைவாகி, தப்பி வந்தபோது தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் வழக்கின் விசாரணை ஜன. 5க்கு தள்ளி வைக்கப்பட்டது.

இலங்கை கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020 ஆக. 20 ல் 23 கிலோ ெஹராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில் அனுரகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரது சகோதரர் இலங்கை துறைமுக போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா 32, போதைபொருளை திருடி தனது சகோதாரர் அனுரகுமாரவிடம் கொடுத்திருக்கலாம், என போலீசார் சந்தேகமடைந்து அவரிடம் விசாரிக்க இருந்தனர். இதனால் பிரதீப்குமார் இலங்கையில் இருந்து பைபர் படகில் தமிழகத்திற்கு தப்பி வந்தார்.

2020 செப். 4ல் பிரதீப்குமார் பண்டாராவை மண்டபம் கடலோர போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சி. பி. சி. ஐ. டி. , க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்த பிரதீப்குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2ல் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி பிரபாகரன் ஜன. 5க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி