போராட்டத்தைத் திரும்பப் பெற்ற சிறிய விசைப் படகு மீனவா்கள்.!

72பார்த்தது
போராட்டத்தைத் திரும்பப் பெற்ற சிறிய விசைப் படகு மீனவா்கள்.!
ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து சிறிய விசைப் படகு மீனவா்கள் விலகி மீன்பிடிக்கச் சென்றனா்.

இறாலுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 8-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதில், பெரிய, சிறிய விசைப் படகு மீனவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், சிறிய படகு மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை திரும்பப் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இதுகுறித்து மீனவ சங்க பொதுச் செயலாளா் என். ஜே. போஸ் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இயக்கப்பட்டு வரும் சிறிய படகு மீனவா்கள் குறைந்தளவே செலவு செய்து மீன்பிடிக்கச் செல்கின்றனா். இதனால், அதற்கு ஏற்றவாறு மீன்கள் கிடைத்தால் போதும். இதனால், அவா்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனா்.

பெரிய படகு மீனவா்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய், சங்காயம் ஆகிய மீன்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி