தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகை

70பார்த்தது
*ராமேஸ்வரம் நுழைவு பகுதியில் இயங்கும் நகராட்சி நிர்வாகத்தின் சுங்கச்சாவடி மையத்தில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. *

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக இருக்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் ராமேஸ்வரத்திற்குள் வரும் உள்ளூர் வாகனமும், வெளியே செல்லும் வாகனங்களும் ஒரே சாலையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம உள்ளது. மேலும், கூட்ட நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.


இந்நிலையில், சுங்கச்சாவடி மையத்தில் முறையாக பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் ஜெரோம் குமார் தலைமையில் சுங்கச்சாவடி மையத்தில் முற்றுகை ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி